கடைசி டி20 போட்டி - இந்திய அணியை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா வெற்றி

Cricket Indian Cricket Team South Africa National Cricket Team
By Nandhini Oct 05, 2022 05:23 AM GMT
Report

கடைசி டி20 போட்டி -

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு வருகை தந்துள்ளது. இந்தியா அணியும், தென்னாப்பிரிக்கா அணியும் மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டியில் விளையாடி வருகிறது. 

இந்நிலையில், இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

இப்போட்டியில், 49 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.

இத்தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் இத்தொடரை கைப்பற்றியது. இதனையடுத்து, இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாளை லக்னோவில் நடைபெற இருக்கிறது. 

south-africa-india-cricket