ஆஸ்திரேலியாவுக்கு விழுந்த இடி! டி20 உலகக்கோப்பையில் முக்கிய வீரர் இல்லை
டி20 உலகக்கோப்பை தொடரில் காயம் காரணமாக ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸ் விளையாட மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா மற்றும் இலங்கையில் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க உள்ள டாப் அணிகள் தனித்தனி டி20 தொடர்களில் விளையாடி தயாராகி வருகின்றன.

ஆஸ்திரேலிய அணியைப் பொறுத்தவரை பேட் கம்மின்ஸ்தான் முக்கிய தூண் ஆவார். அவரது தலைமையில் பல தொடர்களை ஆஸ்திரேலியா கைப்பற்றியுள்ளது.
இந்த நிலையில் வேகப்பந்து வீச்சாளரான பேட் கம்மின்ஸ் டி20 உலகக்கோப்பையில் காயம் காரணமாக விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இது ஆஸ்திரேலிய அணிக்கு மிகப்பெரிய அடியாகப் பார்க்கப்படுகிறது. அவருக்கு பதிலாக பென் துவர்ஷூயிஸ் சேர்க்கப்படுவதாகவும் தெரிய வந்துள்ளது.
பென் துவர்ஷூயிஸ் 13 டி20 போட்டிகளில் 20 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.
