கோலி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கங்குலி - கொந்தளித்த ரசிகர்கள்

Virat Kohli Rohit Sharma Sourav Ganguly
By Thahir Dec 12, 2021 05:41 PM GMT
Report

ரோகித் சர்மாவின் கேப்டன்சி குறித்து சவுரவ் கங்குலி பேசிய விஷயங்கள் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இந்தியாவின் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் அணிகளின் கேப்டனாக ரோகித் சர்மா சமீபத்தில் நியமிக்கப்பட்டார்.

விராட் கோலியின் விருப்பம் இல்லாமல் பிசிசிஐ, தனது அதிகாரத்தை பயன்படுத்தி வேண்டுமென்றே ரோகித்தை கேப்டனாக்கி இருப்பதாக சர்ச்சை எழுந்தது.

டி20 அணியின் கேப்டன்சியில் இருந்து கோலி விலகிய போது, இனி ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளை சிறப்பாக வழிநடத்த முயற்சிகள் எடுப்பேன் என கூறியிருந்தார்.

ஆனால் அவரின் விருப்பத்திற்கு சற்றும் இடமளிக்காமல் பிசிசிஐ இதுபோன்ற முடிவுகளை எடுத்துள்ளது எனக்கூறி ரசிகர்கள் இணையத்தில் விமர்சனங்களை அள்ளி வீசி வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் பதிலளித்த சவுரவ் கங்குலி, டி20 மற்றும் ஒருநாள் அணிக்கு தனி தனி கேப்டன்சி சரியாக இருக்காது என்று முடிவெடுத்தோம்.

இதற்காக தான் கோலியிடம் டி20 அணியின் கேப்டன்சியில் இருந்து நீங்க வேண்டாம் என வலியுறுத்தினோம். ஆனால் அவர் அதனை கேட்காததால் தான் தற்போது இந்த முடிவு எடுக்கப்பட்டது எனத்தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது புதிதாக கொடுத்துள்ள விளக்கம் கோலி ரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளது. அதில் அவர், ரோகித் சர்மாவின் கேப்டன்சியில் முழு நம்பிக்கை இருந்ததால் தான் கேப்டன்சி ஒப்படைக்கப்பட்டது.

ஐபிஎல் தொடரில் 5 முறை கோப்பையை வென்று கொடுத்து அசத்தியுள்ளார். இது சாதாரண விஷயம் அல்ல. அத்தகைய திறமை கொண்டவர் ரோகித் சர்மா.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் நடந்த ஏசியா கோப்பை தொடரில் இந்திய அணியை ரோகித் சர்மா தான் வழிநடத்தி கோப்பையை வென்றுக்கொடுத்தார்.

அப்போது விராட் கோலி அணியில் இல்லாத போதும் ரோகித்தால் கோப்பை வென்றுக்கொடுக்க முடிந்தது. அவரால் ஒரு தொடரை சிறப்பாக முடித்துக்கொடுக்க முடியும்.

அது நிறைவேறும் என நம்புவதாக சவுரவ் கங்குலி தெரிவித்தார். கங்குலியின் இந்த பேச்சால் விராட் கோலி ரசிகர்கள் சூடாகியுள்ளனர்.