விராட் கோலி ஒரு சண்ட கோலி...கோலியை மீண்டும் வம்பிழுக்கும் கங்குலி

India Cricket Fight Virat Kohli Sourav Ganguly
By Thahir Dec 19, 2021 04:33 PM GMT
Report

ஒரே நாட்டை சேர்ந்த அரச குடும்பத்தினர் போரிட்டு கொண்டால் எப்படி இருக்கும்.. அந்த நாட்டு மக்களுக்கு எப்படி இருக்கும். அது தான் இந்திய கிரிக்கெட்டிலும் நடைபெற்று வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அரசனுக்கும், இந்நாள் அரசனுக்கும் போர் ஏற்பட்டுவிட்டது. இதில் பாதிக்கப்பட போவது இந்திய கிரிக்கெட்டும், ரசிகர்களும் தான்.

இந்த மோதல் எப்போது முடிவுக்கு வரும் என தெரியவில்லை. டி20 கேப்டன் பதவியை விட்டு விலக வேண்டாம் என்று விராட் கோலியிடம் கூறியதாக கங்குலி கூறினார்.

ஆனால் தம்மிடம் அப்படி யாரும் கூறவில்லை என்று பத்திரிகையாளர் சந்திப்பில் விராட் கோலி உண்மையை போட்டு உடைத்தார். இதனால் கங்குலி பொய் கூறிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது குறித்து கங்குலியிடம் விளக்கம் கேட்ட போது, அவர் பதில் அளிக்கவில்லை இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கங்குலி கலந்து கொண்டார்.

அப்போது கங்குலியிடம் எந்த வீரரின் நடத்தையும் செயல்பாடும் உங்களுக்கு பிடிக்கும் என்று கேள்வி எழுப்பபட்டது.

இதற்கு சற்றும் யோசிக்காத கங்குலி, விராட் கோலியின் நடத்தை மற்றும் களத்தில் அவரது செயல்பாடு எனக்கு மிகவும் பிடிக்கும் என்றார்.

அத்துடன் பேச்சை முடித்து இருந்தால் இந்த விவகாரம் முடிந்திருக்கும். ஆனால் கங்கலி, விராட் கோலி அதிகமாக சண்டையிடுவார் என்ற கருத்தை கூறிவிட்டார்.

அதாவது விராட் கோலி அனைவரிடமும், எப்போதும் சண்டை போடுவது தமக்கு பிடிக்காது என்று மறைமுகமாக கங்குலி கூறினார். கங்குலியின் இந்த பேச்சு விராட் கோலி ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

தனது பேட்டி மூலம் கங்குலியை விராட் கோலி சிக்க வைத்தார். இதனால் கோலி மீது கங்குலி அதிருப்தியில் உள்ளதாக தெரிகிறது.

தென்னாப்பிரிக்க தொடரை இந்தியா இழந்தாலோ, இல்லை ரன் குவிக்காமல் போனாலோ , அவரது டெஸ்ட் கேப்டன் பதவிக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.