பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து சவுரவ் கங்குலி விலகல்? - ரசிகர்கள் அதிர்ச்சி!

Sourav Ganguly
By Swetha Subash Jun 01, 2022 01:22 PM GMT
Report

பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, தனது வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தை தொடங்க போவதாக ட்விட் செய்திருப்பது அவர் பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யப்போகிறாரா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி வாரியமான பிசிசிஐ-யின் தலைவராக பொறுப்பு வகித்துவரும் சௌரவ் கங்குலி துவண்டு கிடந்த இந்திய அணியை மீட்டு, பலமான அணியை கட்டமைத்த பெருமைக்குரியவர் ஆவார்.

பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து சவுரவ் கங்குலி விலகல்? - ரசிகர்கள் அதிர்ச்சி! | Sourav Ganguly To Start New Chapter Tweets

இந்நிலையில், அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 30 ஆண்டுகள் கிரிக்கெட் பயணத்தை நிறைவு செய்துவிட்டதாக குறிப்பிட்டு பதிவு ஒன்றை போட்டுள்ளது கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

30 ஆண்டுகள் கிரிக்கெட் பயணத்தை நிறைவு செய்துவிட்டதாக குறிப்பிட்டுள்ள அந்த பதிவில், தனது பயணத்தில் உடன் இருந்த ஒவ்வொரு நபருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் பலருக்கும் உதவும் வகையில் ஒன்றை தொடங்க திட்டமிட்டுருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த புதிய அத்தியாத்திற்கும் அனைவரும் ஆதரவு இருக்கும் என நம்புவதாக கங்குலி பதிவிட்டுள்ளார். சவுரவ் கங்குலியின் இந்த பதிவால் குழப்பமடைந்த அவரது ரசிகர்கள் அவர் பிசிசிஐ தலைவர் பொறுப்பில் இருந்து விலகக் போகிறாரா என பேசி வருகின்றனர்.

ஆனால், கங்குலி பிசிசிஐ தலைவர் பொறுப்பில் இருந்து விலக மாட்டார் என்று பிசிசிஐ செயலர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார்.