எல்லாருக்கும் நடந்ததுதான்...கோலிக்கும் நடக்குது..கங்குலி ஓபன்டாக்!

Sourav Ganguly Virat Kohli Cricket
By Sumathi Jul 14, 2022 07:12 AM GMT
Report

வீராட் கோலியின் ஃபார்ம் குறித்து முதல் முறையாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி கருத்து தெரிவித்துள்ளார்.

விராட் கோலியின் ஃபார்ம்

முன்னாள் கேப்டன் விராட் கோலி சர்வதேச போட்டிகளில் கடந்த 2019-ம் ஆண்டு நவம்பருக்கு பிறகு சதம் எதுவும் அடிக்கவில்லை. சமீபகாலமாக அவர் ரன் குவிக்க முடியாமல் தடுமாறி வருகிறார்.

virat kholi

விமர்சனங்கள்

இதனால் அவரை பலரும் விமர்சித்து வருகின்றனர். முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் அவர் விளையாட்டில் இருந்து ஓய்வு எடுக்க பரிந்துரைத்துள்ளனர். விராட்கோலியை 20 ஓவர் அணியில் இருந்து நீக்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் கபில்தேவ் சமீபத்தில் கருத்து தெரிவித்தார்.

எல்லாருக்கும் நடந்ததுதான்...கோலிக்கும் நடக்குது..கங்குலி ஓபன்டாக்! | Sourav Ganguly On Virat Kohlis Poor Batting Form

இது குறித்து மவுனம் காத்து வந்த பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தற்போது கருத்து தெரிவித்துள்ளார்.

திறமையும் தரமும் கொண்டவர் கோலி

சர்வதேச கிரிக்கெட்டில் அவர் செய்துள்ள சாதனைகளை பாருங்கள், அது திறமை மற்றும் தரம் இல்லாமல் நடக்காது. அவர் தற்போது ஒரு கடினமான நேரத்தை அனுபவித்து வருகிறார்.

அது அவருக்கும் தெரியும். ஆனால் அவர் ஒரு சிறந்த வீரராக இருந்துள்ளார். அவர் மீண்டும் திரும்பி வந்து நன்றாகச் செயல்படுவதை நாம் காணலாம். ஆனால் அவர் தனக்கான வழியைக் கண்டுபிடித்து வெற்றிபெற வேண்டும்.

கடந்த 12-13 ஆண்டுகளாக அல்லது அதற்கும் மேலாக களத்தில் இருக்கிறார், விராட் கோலியால் மட்டும் தான் அதைச் செய்ய முடியும்.

எனக்கும் நடந்தது, கோலிக்கும் நடக்கிறது

விளையாட்டில் இது அனைவருக்கும் நடந்துள்ளது.

சச்சினுக்கும் நடந்தது, ராகுலுக்கும் நடந்தது, எனக்கும் நடந்தது, கோலிக்கும் நடந்தது. வருங்கால வீரர்களுக்கும் இது நடக்கும். இது விளையாட்டின் ஒரு பகுதி மற்றும் ஒரு விளையாட்டு வீரராக நீங்கள் கேட்க வேண்டும்,

அது என்ன என்பதை அறிந்து கொண்டு உங்கள் விளையாட்டை நீங்கள் விளையாட வேண்டும் என்று நான் நினைக்கிறேன் என்று கருத்து தெரிவித்துள்ளார்.