கோலி தான் நம்மளோட உண்மையான சொத்து: சவுரவ் கங்குலி கருத்து
கேப்டன் விராட் கோலி இந்திய அணியின் உண்மையான சொத்து, அணியின் எதிர்கால செயல்திட்டத்தை மனதில் வைத்துதான் கோலி தனது டி20 பதவியிலிருந்து விலகினார் என்று பிசிசிஐ தலைவர் சவுரவ்கங்குலி தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் டி20, ஒருநாள், டெஸ்ட் ஆகிய பிரிவுகளுக்கு கேப்டனாக செயல்பட்டு வந்த விராட் கோலி நேற்று ஓர் அறிவிப்பை வெளியிட்டார். அதில் டி20 உலகக் கோப்பைப் போட்டிக்குப்பின் கேப்டன் பதவியிலிருந்து விலகுகிறேன்.
3 பிரிவுகளுக்கும் கேப்டன் பொறுப்பேற்று கடந்த 9 ஆண்டுகளாக எனக்கிருக்கும் பணிச்சுமையை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுக்கிறேன் இந்திய டி20 அணிக்கு அடுத்த கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், அது பிசிசிஐ சார்பில் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்படவில்லை.
இந்த நிலையில் விராட் கோலியின் முடிவு குறித்து பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி விடுத்துள்ள அறிக்கையில்: 'இந்திய அணியின் உண்ைமயான சொத்து விராட் கோலி, உறுதியான தலைமையாக இருந்து வழிநடத்தியிருக்கிறார். அனைத்துப் பிரிவுகளில் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராக கோலி இருக்கிறார். விராட் கோலி டி20 கேப்டன் பதிவியிலிருந்து டி20 உலகக் கோப்பைக்குப்பின் விலகுவது என்பது, இந்திய அணியின் எதிர்கால செயல்திட்டத்தை மனதில் வைத்து எடுக்கப்பட்ட முடிவுதான் எனக் கூறியுள்ளார்.
இந்திய டி20 அணிக்கு மிகச்சிறந்தமுறையில் கேப்டனாக செயல்பட்ட கோலிக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம். டி20 உலகக் கோப்பைப் போட்டியில் சிறப்பாகச் செயல்படவும் பிசிசிஐ வாழ்த்துகிறது, இந்திய அணிக்காக அதிகமான ரன்களைச் சேர்ப்பார் என நம்பிக்கை கொள்கிறோம்' எனத் தெரிவித்துள்ளார்.