தோனி ஆலோசகராக நியமிக்க இதுதான் காரணம்.. மனம் திறந்த பிசிசிஐ தலைவர் கங்குலி
டி20 உலக கோப்பை தொடர் வரும் அக்டோபர் 17-ம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அணிகளை, ஒவ்வொரு நாடும் அறிவித்து வருகிறது.
இந்த வகையில், இந்திய அணி வீரர்கள் பட்டியல் வெளியானது. இதையடுத்து இந்திய அணிக்கு ஆலோசகராக மகேந்திர சிங் தோனி செயல்படுவார் என பிசிசிஐ அறிவித்தது.
இதுகுறித்து சமீபத்தில் பிசிசிஐ தலைவர் கங்குலி பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, 2013ஆம் ஆண்டு மகேந்திர சிங் தோனி தலைமையில் இந்திய அணி கடைசியாக சாம்பியன் டிராபி கைப்பற்றியது.
அந்த தொடரில் இருந்து தற்போது வரை சுமார் 8 ஆண்டுகளாக எவ்வித சர்வதேச ஐசிசி தொடரை இந்திய அணி கைப்பற்றவில்லை.
இந்திய அணிக்கு மகேந்திர சிங் தோனி ஆலோசகராக செயல்பட்டால் நன்றாக இருக்கும் என நினைத்தோம். அதன் காரணமாக அவர் பெயர் இணைக்கப்பட்டது.
தோனி தலைமையில் இந்திய அணி சர்வதேச டி20 போட்டிகளில் மிக அற்புதமாக விளையாடியிருக்கிறது. அவரது தலைமையில் முதல் டி20 உலகக் கோப்பையை இந்திய அணி கைப்பற்றியது.
அதேபோல் ஐபிஎல் தொடரில் அவர் தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை மிகவும் அற்புதமாக செயல்படுகிறது.
டி20 போட்டிகளில் நிறைய அனுபவங்களை தன் கைவசம் வைத்திருக்கும், தோனி இந்திய அணிக்கு ஆலோசகராக செயல்பட்டால் அது இந்திய அணிக்கு பலத்தை அதிகரிக்கும்.
இந்தக் காரணங்களின் அடிப்படையில் அவர் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.