பிசிசிஐ-க்கு இனி புதிய தலைவர்? தேர்தலில் பின் வாங்கும் கங்குலி - காரணம் என்ன?

Sourav Ganguly
By Irumporai Oct 07, 2022 10:47 AM GMT
Report

 பிசிசிஐ தலைவர் தேர்தலில் கங்குலி போட்டியிட மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

கங்குலி

  பிசிசிஐ தலைவர் பதவி காலம் அக்டோபர் 18ம் தேதியுடன் முடியும் நிலையில், நடக்கவிருக்கும் தேர்தலில் சவுரவ் கங்குலி போட்டியிடவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த தலைவர் ரோஜர்

வரும் அக்.18-ம் தேதி நடைபெற உள்ள பிசிசிஐ தலைவர் தேர்தலில் கங்குலி போட்டியிட மாட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பிசிசிஐயின் அடுத்த தலைவராகப் பொறுப்பேற்க ரோஜர் பின்னி மிகவும் விருப்பமானவர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

பிசிசிஐ-க்கு இனி புதிய தலைவர்? தேர்தலில் பின் வாங்கும் கங்குலி - காரணம் என்ன? | Sourav Ganguly Did Not Bcci President Election

அதே சமயம்  சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) தலைவர் பதவிக்கு கங்குலி இந்தியாவின் பிரதிநிதியாக இருப்பார் என்று கூறப்படுகிறது. முன்னணி செய்தி நாளிதழான டைனிக் ஜாக்ரன் வெளியிட்டுள்ள செய்தியின்படி, பிசிசிஐ உயர் அதிகாரிகளின் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கங்குலி போட்டியிடவில்லை

கங்குலி தேர்தலில் போட்டியிட மாட்டார் என்று அதிகாரிகள் மத்தியில் முடிவு செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில் ஜெய் ஷா, துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா, பொருளாளர் அருண் தும்மல் மற்றும் முன்னாள் பிசிசிஐ தலைவர் என்.சீனிவாசன் ஆகியோருடன் கங்குலியும் கலந்து கொண்டுள்ளார்.

பிசிசிஐ-க்கு இனி புதிய தலைவர்? தேர்தலில் பின் வாங்கும் கங்குலி - காரணம் என்ன? | Sourav Ganguly Did Not Bcci President Election

மேலும், பிசிசிஐ செயலாளர் பதவிக்கு ஜெய் ஷா மீண்டும் போட்டியிட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி-ன் தலைவர் பதவிக்கான தேர்தலும் விரைவில் வரவுள்ளது. எனவே இந்தியாவின் சார்பில் சவுரவ் கங்குலியை அந்த பதவிக்கான தேர்தலில் நிற்கவைக்க முடிவெடுத்துள்ளதாகவும்.

பிசிசிஐ-க்கு அதிக ஆதரவு இருக்கும் என்பதால் கங்குலி வெற்றி பெறுவதற்கும் அதிக வாய்ப்பு உள்ளதால் கங்குலி விலகியுள்ளதாக கூறப்படுகிறது.