கிரிக்கெட்தான் என்னோட வாழ்க்கை : தன் பயோபிக் படம் குறித்து கங்குலி ட்வீட்

souravganguly luvfilms gangulybiopic
By Irumporai Sep 09, 2021 08:22 AM GMT
Report

இந்திய கிரிக்கெட் வீரரும், பிசிசிஐ தலைவருமான கங்குலியின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்படவுள்ளது. இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், கேப்டனுமான சவுரவ் கங்குலி தற்போது பிசிசிஐயின் தலைவராக இருந்து வருகிறார்.

90ஸ் கிட்ஸ்களின் மனம் கவர்ந்த  கிரிக்கெட் வீரரான கங்குலி அவர் கேப்டனாக இருந்த காலத்தில் இந்தியாவிற்கு அணிக்கு பல சாதனைகளை படைத்தவர். குறிப்பாக 2002ஆம் ஆண்டு லார்ட்ஸ்ல் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற பிறகு பால்கனியில் இருந்து கங்குலி தனது சட்டையை கழற்றி வெற்றியைக் கொண்டாடினார்.

இது கிரிக்கெட் ரசிகர்களால் இன்றுவரை பேசப்பட்டு வருகிறது.ரசிகர்களால் தாதா என்று அழைக்கப்பட்ட கங்குலி  இடது கை பேட்ஸ்மேன் இதுவரை  113 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 7212 ரன்கள், 32 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். 311 ஒருநாள் போட்டிகளில் 11363 ரன்கள், 100 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது இந்த வங்கத்து புலி .

இந்த நிலையில் கங்குலியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக வெளியாக உள்ளது இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள சவுரவ் கங்குலி : கிரிக்கெட்தான் என் வாழ்க்கை. அது எனக்கு தன்னம்பிக்கையையும், தலைநிமிர்ந்து நடப்பதற்கான தகுதியையும் அளித்தது. எனது வாழ்க்கையை லூவ் பிலிம்ஸ் திரைப்படமாக எடுக்க முடிவெடுத்துள்ளது ஆச்சர்யத்தையும், மகிழ்ச்சியையும் அளிக்கிறது என தெரிவித்துள்ளார்.