உருவாகிறது "கங்குலியின் பயோபிக்" - ரசிகர்கள் உற்சாகம்

Ranbir Kapoor Sourav Ganguly Ganguly biopic
By Petchi Avudaiappan Jul 15, 2021 10:13 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்திய சினிமாவை பொறுத்தவரை அவ்வப்போது விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்படுவது வழக்கம். ஏற்கனவே சச்சின், தோனி, மித்தாலி ராஜ், முகமது அசாருதீன் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்களின் வரலாறு படமாக வெளியாகியுள்ளது. 

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், ரசிகர்களால் செல்லமாக தாதா என்றழைக்கப்படும் சவுரவ் கங்குலியின் வாழ்க்கை படமாக உருவாக உள்ளது. 

இந்த படத்தில் சவுரவ் கங்கிலியாக ரன்பீர் கபூர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் கங்குலியின் இளமை வாழ்க்கை முதல் அவர் ஒரு சர்வதேச கிரிக்கெட் வீரராக மாறி, கேப்டன் பின்னர் இந்திய கிரிக்கெட் அமைப்பில் பிசிசிஐ தலைவராக நியமிக்கப்பட்டது வரை நடந்த சம்பவங்கள் இந்தப் பயோபிக்கில் இடம்பெறலாம் என கூறப்படுகிறது. மேலும் விரைவில் இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.