ஐசிசி கமிட்டி தலைவராக சவுரவ் கங்குலி நியமனம்: அப்போ பிசிசிஐ தலைவர் பதவி என்னாச்சு? - ரசிகர்கள் அதிர்ச்சி!

captain Sourav Ganguly International Cricket Council
By Anupriyamkumaresan Nov 17, 2021 10:17 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in கிரிக்கெட்
Report

கிரிக்கெட் விதிமுறைகளை தீர்மானிக்கும் ஐசிசி கிரிக்கெட் கமிட்டியின் தலைவராக 2012ஆம் ஆண்டுமுதல் 9 ஆண்டுகளாக முன்னாள் வீரர் அனில் கும்ளே இருந்து வந்தார்.

3 ஆண்டுகள் கொண்ட அந்த பதவியில் கும்ளே தொடர்ந்து நீடித்து வந்த நிலையில், தற்போது விலகியுள்ளார். இதனால் உடனே, அடுத்த தலைவரை தேர்ந்தெடுக்கும் பணியை ஐசிசி மேற்கொண்டு வந்தது. இந்நிலையில் தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஐசிசி, “கிரிக்கெட் விதிமுறைகளை தீர்மானிக்கும் ஐசிசி கிரிக்கெட் கமிட்டியின் தலைவராக சவுரவ் கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார்” எனத் தெரிவித்துள்ளது.

ஐசிசி கமிட்டி தலைவராக சவுரவ் கங்குலி நியமனம்: அப்போ பிசிசிஐ தலைவர் பதவி என்னாச்சு? - ரசிகர்கள் அதிர்ச்சி! | Sourav Ganguly As A New Icc Committe Chairman

இதனைத் தொடர்ந்து அறிக்கை வெளியிட்ட கங்குலி, “கடந்த 9 வருடங்களாக அனில் கும்ளே சிறப்பாக பணியாற்றினார். இவரால், சர்வதேச கிரிக்கெட்டின் தரம் உயர்ந்துள்ளது. டிஆர்எஸ் விதிமுறையை கொண்டு வந்தது, சந்தேகத்திற்கு இடமான பந்துவீச்சு பிரச்சினையை நிவர்த்தி செய்தது போன்றவற்றில் திரம்பட செயல்பட்டார்” எனத் தெரிவித்துள்ளார்.

தற்போது ஐசிசி கிரிக்கெட் கமிட்டியின் தலைவராக கங்குலி நியமிக்கப்பட்டாலும், பிசிசிஐ தலைவராக தொடர்ந்து செயல்படுவார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

ஐசிசி கமிட்டி தலைவராக சவுரவ் கங்குலி நியமனம்: அப்போ பிசிசிஐ தலைவர் பதவி என்னாச்சு? - ரசிகர்கள் அதிர்ச்சி! | Sourav Ganguly As A New Icc Committe Chairman

ஒருத்தர் ஒரு பதவியில் மட்டுமே இருக்க வேண்டும் என்பது பிசிசிஐ விதிமுறை. கங்குலிக்காக அது தளர்த்தப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் அடுத்து நடைபெறவுள்ள டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் புதிய விதிமுறை எதுவும் சேர்க்கப்படாது, பழைய விதிமுறையே தொடரும் எனவும் ஐசிசி அறிவித்துள்ளது.