சௌந்தர்யாவால் தனுஷ் ஐஸ்வர்யா பிரிந்தார்களா..?இப்படியும் ஒரு காரணமா..?
நடிகர் தனுஷ் 18 வருட திருமண வாழ்க்கையை முறித்து கொண்டார்.
தனுஷ் ஐஸ்வர்யா
வளர்ந்து வரும் நாயகனாக இருந்த போது, சூப்பர்ஸ்டாரான ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார் தனுஷ். 18 வருட நீடித்த இவர்களது திருமண வாழக்கை திடீரென முற்றுப்பெற்றுள்ளது.
இதற்கான காரணம் குறித்து எந்த தகவலும் இல்லாத நிலையில், பலரும் பல கருத்துக்களை கூறி வருகின்றனர். அவ்வாறான ஒரு கருத்து தான் தற்போது சமூகவலைத்தளத்தில் வேகமெடுத்துள்ளது.
தனுஷ் தற்போது இயக்கவிருக்கும் அடுத்த படம் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம். இந்த திரைபடத்தில் தனுஷின் உறவினர் பவிஷ் நடிகராக அறிமுகம் ஆகிறார்.
மேலும் அனிகா, மேத்யூ தாமஸ், பிரியா பிரகாஷ் வாரியர் உள்ளிட்டோரும் இப்படத்தில் நடிக்கிறார்கள்.
ஐஸ்வர்யா காரணமா..?
இப்படத்தை முதன் முதலில் இயக்கவிருந்தது ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் தங்கை சௌந்தர்யா ரஜினிகாந்த் தான். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தனுஷின் திரைக்கதை மற்றும் வசனத்தில் சௌந்தர்யா ரஜினிகாந்த் இப்படத்தை இயக்குவதாக இருந்தார்.
ஆனால், படம் ட்ராப்பானது. அப்படத்தை தான் தற்போது தனுஷ் இயக்குகிறார். தனுஷும் ஐஸ்வர்யாவும் ஒன்றாக இருந்த போது, தனுஷ் தனது தங்கையுடன் சேர்ந்து பணிபுரிய கூடாது என ஐஸ்வர்யா தனுஷிடம் கேட்டதாக கூறப்படுகிறது.
இதுவே இருவரும் பிரிந்ததற்கான சண்டையாக இருக்கும் என்றும் தகவல்கள் கசிந்துள்ளது.