தனுஷூக்கு போட்டியாக களமிறங்கிய சவுந்தர்யா - என்ன செய்தார்ன்னு தெரியுமா? வெளியான தகவல்...!
தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து
நடிகர் தனுஷிம், ஐஸ்வர்யாவும் விவாகரத்து பெற்று பிரிந்து செல்வதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். இந்த அறிவிப்பால், ஒட்டுமொத்த சினிமாத்துறையும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த அறிவிப்பை கேட்ட நடிகர் ரஜினிகாந்த், யாரிடம் பேசாமல் வீட்டை விட்டு வெளியே சென்றார். இதனால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானார். தந்தையிடம் போனில் தொடர்பு கொண்டு பேசிய ஐஸ்வர்யாவை தீட்டித் தீர்த்துவிட்டார். தந்தையின் கோபத்தை கண்டு மிரண்டு போன ஐஸ்வர்யா, கணவர் தனுஷுடன் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்தார்.
ஆனால், நடிகர் தனுஷ் மீண்டும் ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை என்று கறாரா தெரிவித்து வந்தார். இதனையடுத்து, இரு குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்களும், நண்பர்களும் இவர்களை சேர்த்து வைக்க முயற்சி செய்து வந்தனர்.
ரசிகர்கள் இருவரையும் ஒன்றாக சேர்ந்து விடுங்கள் என்று சமூகவலைத்தளங்களில் பல மாதங்களாக வேண்டுகோள் விடுத்து வந்தனர்.
நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா சுமூக முடிவு
இந்நிலையில், சமீபத்தில் நடிகர் தனுஷ். ஐஸ்வர்யா விவாகரத்து செய்யும் முடிவை தற்காலிகமாக கைவிடப்போவதாக தகவல் வெளியானது. ரஜினிகாந்த் வீட்டில் நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எடுக்கப்பட்டது. இதனால், ரசிகர்கள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தனுஷூக்கு போட்டியாக களமிறங்கிய சவுந்தர்யா
இதனையடுத்து, சமீபத்தில் சவுந்தர்யா - அஷ்வின் தம்பதிக்கு 2-வது ஆண் குழந்தை பிறந்தது. மகனுக்கு வீர் ரஜினிகாந்த் வணங்காமுடி என்று பெயர் வைத்தார்.
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் சவுந்தர்யா குறித்த தகவல் ஒன்று வைரலாகி வருகிறது.
அதில், சவுந்தர்யா ரஜினிகாந்த், சென்னை ஈசிஆரில் பிரம்மாண்ட வீடு ஒன்றை கட்டும் பணியை தொடங்கி இருக்கிறாராம். கடந்த வாரம்தான் இதற்கான பூமி பூஜை நடந்துள்ளதாம். இந்த பூமி பூஜையில் நடிகர் ரஜினிகாந்தும் கலந்து கொண்டுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் தனுஷ் சென்னை போயஸ் கார்டனில் பல கோடி ரூபாய் மதிப்பில் வீடு ஒன்றை கட்டி வருகிறார். அந்த வீட்டில் விரைவில் தன் மனைவி ஐஸ்வர்யாவுடன் குடியேற இருப்பதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், சவுந்தர்யாவும் புது வீடு கட்டும் பணியை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் தனுஷூக்கு போட்டியாக களமிறங்கிட்டார் போல இருக்கே என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.