மீண்டும் தாயானார் ரஜினியின் மகள் : வைரலாகும் புகைப்படம்

Rajinikanth Soundarya Rajinikanth
By Irumporai Sep 12, 2022 02:42 AM GMT
Report

சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

சௌந்தர்யா ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் - லதா தம்பதியின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த். இவர் அஸ்வின் என்பவரை திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர். இவருக்கு வேத் என்ற மகன் உள்ளார். இதையடுத்து தொழிலதிபர் விசாகன் வணங்காமுடியை சௌந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் செய்து கொண்டார்.

மீண்டும் தாயானார்  ரஜினியின் மகள்  : வைரலாகும் புகைப்படம் | Soundarya Rajinikanth Blessed With A Baby Boy

ஆண் குழந்தை

இந்நிலையில் சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது இணையதள பக்கத்தில், கடவுளின் அபரிமிதமான கருணையுடன், எங்கள் பெற்றோர் ஆசீர்வாதத்துடன் ,விசாகன், வேத் மற்றும் நானும் இன்று வேதின் தம்பி வீர் ரஜினிகாந்த் வணங்காமுடியை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் எங்கள் மருத்துவர்களுக்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.    

சௌந்தர்யா ரஜினிகாந்த்துக்கு மீண்டும் குழந்தை பிறப்பதிருப்பதில் மகிழ்ச்சி என்றும் ரஜினிகாந்த் மீண்டும் தாத்தா ஆகியிருக்கிறார் என்று நெகிழ்ந்து போயுள்ள அவரது ரசிகர்கள் சௌந்தர்யா மற்றும் விசாகன் தம்பதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.