மலைப்பாம்பை கையில் எடுத்து கொஞ்சிய தமிழிசை சௌந்தராஜன்
வனத்துறையில் மிருகங்களை பார்வையிட்ட புதுவை கவர்னர் தமிழிசை சௌந்தராஜன் கையில் மலைப்பாம்பை எடுத்து மகிழ்ந்த காட்சி பூரிப்பை ஏற்படுத்தியது. நாட்டின் 75வது சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக புதுச்சேரி வனத்துறையில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இதில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு மரக்கன்று நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பிறகு அவர் வனத்துறையில் உள்ள வன விலங்குகள், பறவைகள், கடல் வாழ் உயிரினங்கள் ஆகியவற்றை பார்வையிட்டார். மேலும், மலைப்பாம்பு ஒன்றை கையில் எடுத்து பார்த்து மகிழ்ந்தார். அங்குள்ள வனவிலங்கு, பறவைகள் மாதிரிகளையும் பார்வையிட்டார்.
வனத்துறை அதிகாரி சத்தியமூர்த்தி வனங்களை பற்றி விவரித்தார். மேலும் கவர்னரின் உதவியாளர்கள் மற்றும் வனத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.