ஆன்மா, மறுபிறவியெல்லாம் உண்மையா? இறந்த பின் என்ன நடக்கும்? விஞ்ஞானி முக்கிய தகவல்!
உயிர் இழந்த பிறகு உயிருக்கு என்ன ஆகும்? உயிர் எங்கு செல்லும்?
மறுபிறவி?
ஒரு உடலில் இருந்து பிரியும் உயிர், மீண்டும் பிறக்கும், இது தான் மறுபிறவி என்று கூறப்படுகிறது. ஆனால், ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைகழகத்தின் பேராசிரியரான மருத்துவர் ஷான் கரோல்,
அறிவியல் பூர்வமாக இறந்த பின்பு உயிர் என்பதே கிடையாது என்று கூறுகிறார். மேலும், நெவாடாவில் நடைபெற்ற ஒரு கான்பரன்சில், ஒரு நபர் இறந்த பின்பு உடலில் ஏற்படக்கூடிய ரசாயன மாற்றங்கள் சார்ந்த செயல்பாடுகள் அனைத்துமே நின்றுவிடும்.
ரசாயனக் கலவை
எனவே உயிர் நீடிக்க எந்தவிதமான வழியும் இல்லை. இயற்பியல் விதிகளின்படி இறந்த நபருடைய கான்ஷியஸ்னஸ் எந்த விதத்திலும் வேலை செய்யாது என்ற காரணத்தால் மறுபிறவிக்கு சாத்தியமில்லை. ஆன்மா என்ற விஷயமே இல்லை.
மனித உடல் என்பது ஒரு ரசாயனக் கலவை. மனித உடல் ஆட்டம்களின் கூட்டம். அது ரசாயனங்களின் விளைவுகளால் இயங்குகிறது, ஸ்ப்ரிச்சுவல் ஆற்றலால் அல்ல. அதற்கான எக்ஸ்பைரி காலம் வந்த பிறகு, அதாவது வாழ்நாள் முடிந்துவிட்டால்,
அது முழுவதுமாக அழிந்து விடும். அது மட்டுமல்ல, ஒரு புதிய உயிரால், முற்பிறவியில் நடந்ததை நினைவில் வைத்துக் கொள்ள முடியாது எனத் தெரிவித்துள்ளார்.