"சூனியம் வைத்துள்ளேன்..திமுகாவுக்கு வாக்களிக்காவிட்டால் உடல் நிலை சரியில்லாமல் போகும்" - திமுக வேட்பாளரின் சர்ச்சைப் பேச்சு
திமுகாவுக்கு வாக்களிக்காவிட்டால் உடல்நிலை சரியில்லாமல் போகும் ஏனென்றால் சூனியம் வைத்துள்ளேன் என திமுக வேட்பாளர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக வாக்கு சேகரிக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் பிரச்சாரத்தின்போது மக்களை கவர்வதற்காக துணிகளை துவைத்தும் மக்களுக்காக சேவையாகில் செய்வது போலும் மக்களிடம் வாக்கு சேகரித்தும் வருகின்றனர். இந்தநிலையில், கடலூர் தொகுதி தி.மு.க வேட்பாளர் ஐயப்பன் மக்களை மிரட்டும் வகையில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய ஐயப்பன், ‘கடலூர் மக்களுக்கு கேரள மந்திரவாதிகள் மூலமாக சூனியம் வைத்துள்ளதாகவும், திமுகவுக்கு ஓட்டுபோடாதவர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போகும் என்றும் பிரச்சாரத்தின் போது திமுக வேட்பாளர் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விருப்பப்பட்டு யார் பணம் கொடுத்தாலும் வாங்கி கொள்ளுங்கள் என்றும் ஆனால் உதயசூரியனுக்கு வாக்களித்துவிட்டு அதனை செலவு செய்யுங்கள் எனவும் திமுக வேட்பாளர் ஐயப்பன் வாக்கு சேகரிப்பின் போது பேசினார்.