ரொம்ப அவமானப்படுத்திய வீட்டு ஓனர்...! - பதிலுக்கு நடிகர் சூரி என்ன செய்தார்ன்னு தெரியுமா? - வெளியான தகவல்...!

Tamil Cinema Soori
By Nandhini Jan 20, 2023 12:42 PM GMT
Report

நடிகர் சூரி

சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான ‘வெண்ணிலா கபடிக்குழு’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் நகைச்சுவை நடிகர் சூரி. அதன்பின் பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்தார்.

மேலும், வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான விடுதலை திரைப்படத்தில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது.

தற்போது மேலும் ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார். சினிமாவில் நடிப்பது மட்டுமில்லமால் மதுரையில் ஓட்டல் தொழிலையும் சூரி நடத்தி வருகிறார்.

soori-indian-actor

ரொம்ப அவமானப்படுத்திய வீட்டு ஓனர்

இந்நிலையில், நடிகர் சூரியை குறித்து தற்போது ஒரு தகவல் வைரலாகி வருகிறது. சூரி சினிமாவில் வாய்ப்பு தேடி வந்த நாட்களில் சென்னையில் வீடு வாடகைக்கு குடியிருந்திருக்கிறார். அவர் தங்கியிருந்த வீட்டு மாடியில் நிறைய மரங்கள் இருக்குமாம்.

ஒருமுறை சூரியின் மகள் அந்த மரங்களின் முன்பு நின்று புகைப்படம் எடுத்திருக்கிறார். இதைப்பார்த்த அவர் குடியிருக்கும் வீட்டின் சொந்தகார பெண் சூரியை ரொம்பவே திட்டிவிட்டாராம். இதனால் அவமானமடைந்த சூரி அந்த வீட்டிலிருந்து வெளியேறி வேறு வீட்டில் குடியேறி இருக்கிறார்.

அதன்பிறகு, சினிமாவில் நன்றாக வளர்ந்த வந்த பிறகு, அவர் குடியிருந்த வீட்டின் அருகே ஒரு பிளாட் விற்பனைக்கு வருவதாக அவரின் மனைவி அவரிடம் கூறியிருக்கிறார். இதைக் கேட்ட சூரி, கஷ்ட நஷ்ட பட்டாவது அந்த இடத்த வாங்கலாம். அட்வான்ஸ் கொடுத்திடு. அவமானப்பட்ட இடத்தில மரியாதையாய் போய் உட்காரணும் என்று கூறியுள்ளாராம்.