சூரி இல்ல திருமண விழாவில் கொள்ளை - அதிர்ச்சியில் திரையுலகம்
காமெடி நடிகர் சூரியின் இல்ல திருமண விழாவில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் சூரியின் அண்ணன் முத்துராமலிங்கத்தின் மகள் திருமண விழா கடந்த 9 ஆம் தேதி மதுரை சிந்தாமணி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
திருமணத்தை சூரி முன் நின்று நடத்தி வைக்க நடிகர்கள் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, கருணாஸ், சீமான் உள்ளிட்ட பலர் நேரில் சென்று மணமக்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார்கள்.
இந்நிலையில், அந்த திருமணத்தில் 10 சவரன் மதிப்பிலான நகை கொள்ளை போனதாக கீரைத்துறை போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.