‘நீ ஜெயிச்சிட்ட மாறா’- 7 பிரிவுகளில் விருதுகளை அள்ளிய சூரரைப்போற்று

SooraraiPottru siima SIIMA2021
By Petchi Avudaiappan Sep 20, 2021 05:09 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in சினிமா
Report

 சைமா விருது விழாவில் நடிகர் சூர்யாவின் ‘சூரரைப் போற்று’படம் 7 விருதுகளை குவித்துள்ளது.

சுதா கொங்காரா இயக்கத்தில் நடிகர் சூர்யா தயாரித்து நடித்த சூரரைப்போற்று திரைப்படம் கடந்த ஆண்டு நவம்பர் 12 ஆம் தேதி நேரடியாக அமேசான் ஓடிடி தளத்தில் வெளியானது. ஜி.வி.பிரகாஷ்குமார் இசையில் கேப்டன் கோபிநாத் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது.

சமீபத்தில் மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் சூரரைப் போற்று சிறந்த படம், சிறந்த நடிகர் என இரண்டு பிரிவுகளில் விருதுகளைக் குவித்த நிலையில், தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்ற சைமா விருது விழாவில் 7 விருதுகளைக் குவித்துள்ளது.

சிறந்த நடிகர். சிறந்தப் படம், சிறந்த இயக்குநர், சிறந்த ஒளிப்பதிவாளர், சிறந்த தயாரிப்பாளர், சிறந்த நடிகை, சிறந்த இசையமைப்பாளர் என ஏழு பிரிவுகளில் விருதுகளை அள்ளியுள்ளது.இதனை உற்சாகத்துடன் தனது ட்விட்டர் பக்கத்தில் சூர்யா பகிர்ந்து மொத்த படக்குழுவிற்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

கொரோனா ஊரடங்கால் இந்த விழாவில் 2019 மற்றும் 2020 ஆகிய இரண்டு ஆண்டுகளுக்கான விருதுகள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.