நடிகர் சோனு சூட் அலைபேசிக்கு உதவிக்கெட்டு குவிந்து வரும் குறுஞ்செய்திகள்

பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட் அவர்களின் அலைபேசிக்கு கொரோனாவுக்காக உதவிகள் கோரி பல குறுஞ்செய்திகள் குவிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

பிரபல நடிகர் சோனு சூட் அவர்கள் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது தான் அந்த தொற்றில் இருந்து மீண்டு வந்துள்ளார். முன்னதாக இவர் பொதுமக்களுக்கு தன்னால் இயன்றவரை தன சொத்துக்கள் முதற்கொண்டு அடகுவைத்து மக்களுக்கு நல உதவிகளை செய்து வந்தார்.

மேலும் வெவ்வேறு மாநிலங்களில் இருந்து சொந்த மாநிலத்துக்கு செல்லமுடியாது மக்களுக்கு தனது சொந்த செலவில் பயணத்திற்கு உதவி புரிந்தார். இந்நிலையில் தொடர்ந்து உதவி கேட்டு, தனக்கு ஏராளமான அழைப்புகள் வருவதாக சில நாட்களுக்கு முன் அவர் தெரிவித்திருந்தார். 'இந்தியா முழுவதும் இருந்து மருத்துவமனை படுக்கைகள், மருந்துகள், ஊசிகள் என ஏராளமான அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளன.

பலருக்கு என்னால் உதவ முடியவில்லை. தயவு செய்து வீட்டில் இருங்கள். முகக் கவசம் அணியுங்கள் என்று கூறியிருந்தார். இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த சோனு சூட் இப்போது மீண்டுள்ளார். அவர் தனது செல்போனுக்கு உதவிகள் கேட்டு தொடர்ந்து மெசேஜ்கள் வந்துகொண்டிருப்பதாகக் கூறி அந்த காணொளியை ட்விட்டரில் இப்போது வெளியிட்டுள்ளார்.

'உங்களை தொடர்பு கொள்ள முயற்சி செய்து வருகிறோம். அதில் தாமதமோ, தொடர்பு கொள்ள இயலாத நிலையோ ஏற்பட்டால் மன்னித்துக் கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளார். 

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்