கொரோனா நோயாளிகளுக்காக 10 ஆக்சிஜன் சிலிண்டர்களை இலவசமாக வழங்கினார் சோனு சூட்

corona cinema bollywood oxygen sonusood
By Praveen Apr 15, 2021 02:56 PM GMT
Report

 கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் பிரபல நடிகர் சோனு சூட், 10 ஆக்சிஜன் ஜெனரேட்டர்களை இலவசமாக மருத்துவமனைக்கு வழங்கி உதவியுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றால் நாடு முழுவதுமுள்ள மக்கள் கடுமையான பாதிப்பைச் சந்தித்து வருகின்றனர். மோடி அரசு கடந்தாண்டு கொரோனா ஊரடங்கின்போது மக்களைக் கைவிட்ட நிலையில், தன்னார்வலர்களும், அரசியல் கட்சிகளும், சமூக நல அமைப்புகளும் மக்களுக்கு உதவினார்.

நடிகர் சோனு சூட், புலம்பெயர் தொழிலாளர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோருக்கு கோடிக்கணக்கில் செலவழித்து உதவி செய்தார். இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் நகரில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிக்கு ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இதனையடுத்து உடனடியாக அந்த மருத்துவமனைக்கு 10 ஆக்சிஜன் ஜெனரேட்டர்களை நடிகர் சோனு சூட் அனுப்பியுள்ளார். மேலும் வேறு எந்த உதவி வேண்டுமானாலும் தயங்காமல் கேளுங்கள் செய்து தருகிறேன் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

இதுமட்டுமல்லாது, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு சிரமப்படும் ஏழை மக்கள் பலருக்கும் இதுபோல சோனு சூட் உதவி செய்து வருவது மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.