ரயில் படியில் பயணம்.... - போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை...! - மன்னிப்பு கேட்ட சோனுசூட்..!
ரயில் படியில் பயணம் செய்த பாலிவுட் நடிகர் சோனு சூட்டை மும்பை ரயில்வே போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை விடுத்ததையடுத்து, அவர் மன்னிப்பு தெரிவித்தார்.
ரயில் படியில் பயணம்
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், பாலிவுட் நடிகர் சோனுசூட் மும்பை, புறநகர் ரெயிலின் வாசலில் அமர்ந்து மிகவும் ஆபத்தான முறையில் பயணம் செய்வது போன்ற ஒரு வீடியோ தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
இந்த வீடியோ தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவைப் பார்த்த வடக்கு ரெயில்வே சோனுசூட்டை கடுமையாக விமர்சனம் செய்தது.
இது குறித்து வடக்கு ரெயில்வே தன்னுடைய பக்கத்தில், ``லட்சக்கணக்கான மக்களுக்கு முன்மாதிரியாக இருக்கிறீர்கள். ரெயிலில் வாசலில் அமர்ந்து பயணம் செய்வது மிகவும் ஆபத்தானது. உங்களது வீடியோ தவறான செய்தியை நாட்டிற்கு கொடுக்கும். இது மாதிரியான வீடியோ உங்களது ரசிகர்களுக்கு தவறான தகவலை கொடுக்கும். தயவு செய்து இது போல் செய்யாதீர்கள். பாதுகாப்பாக பயணம் செய்யுங்கள்" என்று பதிவிட்டது.
போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை
இதனையடுத்து, மும்பை ரயில்வே போலீஸ் கமிஷனரும் இது குறித்து சோனுசூட்டை எச்சரித்தார். இது மிகவும் ஆபத்தான பயணம். இது போன்ற காரியத்தில் ஈடுபடவேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.
மன்னிப்பு கேட்ட சோனு சூட்
இதற்கு பதிலளித்து பேசிய சோனுசூட், இந்த வீடியோவிற்காக நான் மன்னிப்பு கேட்கிறேன். ஆனால் லட்சக்கணக்கான ஏழைகள் இன்னும் ரயில் கதவுகளுக்கு அருகில் அமர்ந்து பயணம் செய்வதை விரும்புகிறார்கள். நாட்டின் ரெயில்வே அமைப்பை மேம்படுத்தியதற்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார்.
— sonu sood (@SonuSood) December 13, 2022