முதல்வர் பதவி வழங்கினார்கள்; ஒரு காரணத்தால் மறுத்து விட்டேன் - போட்டுடைத்த பிரபல நடிகர்

By Karthikraja Dec 28, 2024 06:00 PM GMT
Report

எனக்கு முதல்வர் பதவி தருவதாக சொன்னார்கள் என சோனு சூட் கூறியுள்ளார்.

 சோனு சூட் 

விஜயகாந்த் நடிப்பில் வெளியான கள்ளழகர் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் சோனு சூட். பல்வேறு, தமிழ், தெலுங்கு படங்களில் நடித்துள்ள இவர் பாலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வருகிறார். 

sonu sood

கொரோனா ஊரடங்கு காலத்தில் எண்ணற்ற உதவிகள் செய்ததன் மூலம் இந்தியா ழுவதும் பிரபலமானார்.

முதல்வர் பதவி

இந்நிலையில் சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் எனக்கு முதல்வர் பதவி தருவதாக கூறினார்கள், நான் மறுத்து விட்டேன் என கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், "மக்கள் 2 காரணங்களுக்காகதான் அரசியலுக்கு வருகிறார்கள். ஒன்று, பணம் சம்பாதிப்பதற்காக. மற்றொன்று, அதிகாரத்தைப் பெறுவதற்காக.இந்த இரண்டிலும் எனக்கு ஆர்வம் இல்லை. 

சோனு சூட்

அரசியலில் சேர்ந்தால் டெல்லியில் வீடு, பதவி, உயர் பாதுகாப்பு போன்ற ஆடம்பரங்கள் கிடைக்கும் எனப் பலரும் என்னிடம் கூறினார்கள். எனக்கு முதல்வர் பதவி தருகிறேன் என்று சொன்னார்கள். நான் மறுத்தபோது, ​ துணை முதல்வர் ஆக சொன்னார்கள். நான் வேண்டாம் என மறுத்து விட்டேன்.

இதுபோன்ற சக்திவாய்ந்த நபர்கள், நம்மைச் சந்தித்து உலகில் மாற்றத்தை ஏற்படுத்த நம்மை ஊக்குவிக்க விரும்புவது ஒரு உற்சாகமான கட்டம். ஆனால், என்னுடைய சுதந்திரத்தை இழக்க விரும்பாததால், அரசியலில் இருந்து விலகி இருக்க விரும்பினேன்" என கூறினார்.