1,200 கி.மீ சைக்கிளில் பயணித்து நடிகர் சோனு சூட்டை காண வந்த ரசிகர்
நடிகர் சோனுசூட்டை காண செருப்பு கூட அணியாமல் சைக்கிளில் சுமார் 1,200 கி.மீ தூரம் சைக்கிளில் பயணித்து வந்த சம்பவம் நடந்துள்ளது.
நடிகர் சோனு சூட் பல திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானவர்.
தமிழில் சந்திரமுகி, ஒஸ்தி, அருந்ததி, சந்திரமுகி ஆகிய படங்களில் நடித்திருந்தார். இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் தொடங்கிய காலகட்டத்திலிருந்தே மக்களுக்கு தேவையான பல உதவிகளை செய்து வருகிறார்.சோனு சூட் .
இந்த நிலையில் சோனுசூட் செய்த உதவிக்கு அவரது இல்லத்திற்கு சென்று பலர் தங்களது நன்றிகளை தெரிவித்து வருகின்றார்கள்.
அந்த வகையில், ரசிகர் ஒருவர் காலில் செருப்பு கூட அணியாமல் 1200 கி.மீ. சைக்கிளில் பயணித்து மும்பையில் உள்ள நடிகர் சோனு சூட் வீட்டிற்கு சென்றுள்ளார்

.
அவரை கைகூப்பி வரவேற்று சோனு சூட் அவருக்கு புது செருப்பு வாங்கி கொடுத்து வழியனுப்பி வைத்துள்ளார்.