பெரிய அளவில் வரி ஏய்ப்பு செய்த சோனுசூட் - ரசிகர்கள் அதிர்ச்சி
பிரபல நடிகர் சோனுசூட் பெரிய அளவில் வரி ஏய்ப்பு செய்ததாக வெளியான தகவல் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ், இந்தி என பல மொழிகளில் வில்லன் வேடத்தில் நடித்து பிரபலமான சோனுசூட் கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கின் போது செய்த பல்வேறு உதவிகளால் பொதுமக்கள் மத்தியில் இன்று வரை ஹீரோவாக கொண்டாடப்பட்டு வருகிறார்.
இதனிடையே பள்ளி மாணவர்களுக்கான வழிகாட்டும் நிகழ்ச்சிகளுக்கு சோனு சூட்டை டெல்லி மாநில அரசு சமீபத்தில் விளம்பரத் தூதராக நியமித்தது. இதனைத்தொடர்ந்து மும்பையிலுள்ள சோனு சூட்டுக்கு சொந்தமான ஆறு இடங்களில் வருமானவரித்துறையினர் இருதினங்களுக்கு முன்பு சோதனை நடத்த தொடங்கினர்.
கிட்டதட்ட 3 நாட்களாக நடந்த இந்த ருமான வரித்துறை சோதனையில் சோனுசூட் வரி ஏய்ப்பு செய்ததை வருமான வரித்துறையினர் கண்டுபிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.