உயிருக்கு ஆபத்தான நிலையில் பிரபல டான்ஸ் மாஸ்டர் : கரம் கொடுத்த நடிகர் தனுஷ்
தமிழ் சினிமாவில் நடன மாஸ்டராக வரும் நடிகராக வலம் வருபவர் சிவசங்கர். பல நடிகர்களுடன் இணைந்து பல்வேறு படங்களில் நடித்துள்ள இவருக்கு தற்போது கொரானாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் சிவசங்கர், தற்போது ஹைதராபாத்தில் உள்ள ஏஐஜி மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் , சிவசங்கர் மனைவி மற்றும் அவரது மூத்த மகனும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவ்வாறான நிலையில் சிவசங்கர் இளைய மகன் அஜய் கிருஷ்ணா தனது தந்தையின மருத்துவ கட்டணங்களை கவனித்துக்கொள்வதற்கு நிதி உதவியை நாடிய நிலையில் சிவ சங்கர் குடும்ப உறுப்பினர்களுக்கு நடிகர்கள் : சோனு சூட் .தனுஷ் மற்றும் விஷ்ணு மஞ்சு ஆகியோர் உதவிக்கரம் நீட்டினர்.
இந்த நிலையில் சோனு சூட் மற்றும் தனுஷின் பங்களிப்புக்கு விளம்பரதாரர் வம்சி காக்கா ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.
தற்போது ஹைதராபாத்தில் உள்ள ஏஐஜி மருத்துவமனையில் சிக்கிசை பெற்று வரும் சிவசங்கர் உடல் நிலை குறித்து தகவல் தெரிவித்துள்ள மருத்துவமனை நிர்வாகம் அவரது நுரையீரலில் 75 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.