ரூ.20 கோடி வரி ஏய்ப்பு செய்தாரா? சோனு சூட் : வெளியான அதிர்ச்சி தகவல்

incometax 20crore SonuSood SonuSoodITSurvey
By Irumporai Sep 18, 2021 07:07 AM GMT
Report

பாலிவுட் பிரபல நடிகர் சோனுசோட் வீட்டில் சில தினங்களுக்கு முன் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த நிலையில் நடிகர் சோனு சூட் ரூ.20 கோடி வரி ஏய்ப்பு செய்தது வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

நடிகர் சோனுசோட் வீட்டில் சில தினங்களுக்கு முன்பு, வருமானவருமான வரித்துறை, மும்பை, லக்னோ, கான்பூர், ஜெய்ப்பூர், டெல்லி, குருகிராமில் உள்ள 28 வளாகங்களில் இந்த ஐடி சோதனை நடத்தியது.

இந்த சோதனையில் வரி ஏய்ப்பு தொடர்பான பல சான்றுகள் கிடைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர் ,இந்தியாவில் கொரோனா ஊரடங்கு காலத்தில் , சோனு சூட் தாராளமாக சமூக நல உதவிகளைச் செய்ய அவர் பாஜகவில் இணையப் போவதாகத் தகவல்கள் வெளியான நிலையில் டெல்லி அரசின் பள்ளி மாணவர்களுக்கான வழிகாட்டு திட்டத்திற்கு சூனு சூட் நியமிக்கப்பட்டார்.

அவருக்கு இந்தப் பொறுப்பைக் கொடுத்த ஆம் ஆத்மி அரசு அவரை பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் களமிறக்கலாம் எனக் கூறப்பட்டது. ஆகவே சோனு சூட்டினை அரசியல் பின்னணியின் காரணமாக அவர் வீட்டில் ரெய்டு நடந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

மேலும், பாஜக தனக்கு வேண்டாதவர்கள் மீது சிபிஐ, வருமானவரித் துறை, அமலாக்கப் பிரிவை ஏவி ரெய்டு நடத்துவதாக ஒரு குற்றச்சாட்டு நிலவுகிறது. அண்மையில் கூட தன்னை காண 1,200 கி.மீ. சைக்கிளில் பயணம் செய்த ரசிகருக்குச் செருப்பு வாங்கி கொடுத்து நடிகர் சோனு சூட் வழியனுப்பிய வைத்தார். இப்படி சேவைக்கு பெயர்போன சோனு சூட் வரி செலுத்தவில்லை என்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது