பிரபல பாடகர் சோனு நிகம் இசை நிகழ்ச்சியில் எம்எல்ஏ மகனால் தாக்கப்பட்டார் - அதிர்ச்சி வீடியோ வைரல்...!

Viral Video Bollywood
By Nandhini Feb 21, 2023 07:11 AM GMT
Report

மும்பையில் நடந்த இசை நிகழ்ச்சியில் பிரபல பாடகர் சோனு நிகாம் எம்எல்ஏவின் மகனால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எம்எல்ஏ மகனால் தாக்கப்பட்ட சோனு நிகாம்

பாலிவுட்டில் பிரபல பாடகராகவும், இசையமைப்பாளராக வலம் வருபவர் சோனு நிகம். பல போராட்டங்களுக்குப் பிறகு தன்னுடைய அற்புதமான குரலால் பார்வையாளர்களைக் கவர்ந்தார். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். தன்னுடைய ரசிகர்களை மகிழ்விக்க தன்னால் முடிந்த அளவு அனைத்தையும் செய்து வருகிறார் சோனு நிகம்.

இந்நிலையில், நேற்று இரவு மும்பையில் உள்ள செம்பூரில் நடந்த நிகழ்ச்சியில் சோனு நிகம் தாக்கப்பட்டார்.

நிகழ்ச்சி முடிந்து சோனு மேடையை விட்டு வெளியேறத் தயாரானார். அப்போது, ​​​​எம்.எல்.ஏ.வின் மகன் பிரகாஷ் பட்டர்பேக்கர், அவரது பாதுகாப்புடன் அவரைத் தாக்கினார். சோனுவின் சகோதரர் மோதலின் போது காயமடைந்தார். தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது தொடர்பாக சோனு மும்பை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், இசையமைப்பாளருடன் புகைப்படம் எடுக்க எம்.எல்.ஏ.வின் மகன் விரும்பியதாக சொல்லப்படுகிறது. சோனுவின் பாதுகாவலர்கள் புகைப்படம் எடுக்கவிடாமல் தள்ளியதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு ஏற்பட்ட வாக்குவாதத்தில் இச்சம்பவம் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

sonu-nigam-attacked-by-mla-son-mumbai