தன் கணவரோடு இருக்கும் பழைய புகைப்படத்தை வெளியிட்டு உருகிய சோனியா காந்தி...!

Twitter Sonia Gandhi Viral Photos
By Nandhini 1 வாரம் முன்

தன் கணவரோடு இருக்கும் பழைய புகைப்படத்தை வெளியிட்டு டுவிட்டரில் நினைவை பகிர்ந்துள்ளார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி.

பாவ்லா மைனோவ் இறப்பு

சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தாயார் பாவ்லா மைனோவுக்கு வயது மூப்பு காரணமாக உடல் நலக் குறைவு ஏற்பட்டு இத்தாலியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தாயாரை பார்ப்பதற்காக சோனியா காந்தி இத்தாலிக்கு சென்றார். அவருடன் ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் இத்தாலிக்கு சென்றனர். பாவ்லா மைனோவ் இறந்த பிறகு, அவருடைய இறுதிச் சடங்கு முடித்து விட்டு நாடு திரும்பினார் சோனியாகாந்தி.

sonia-gandhi-viral-photos

வைரலாகும் புகைப்படம்

இந்நிலையில், நேற்று காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் தன் கணவரோடு இருக்கும் பழைய புகைப்படத்தை வெளியிட்டு அதில், memories என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.