சோனியா அலமாறியில் இருக்கும் சர்ச்சை புத்தகங்கள் உண்மையா?
காங்கிரஸ் தலைவர் சோனியாவின் புகைப்படம் ஒன்றில் அவரின் பின்புறம் உள்ள அலமாறியில் உள்ள புத்தகங்களில் சர்ச்சைக்குரிய புத்தகங்கள் இருப்பதாக சமூக வலைதளங்களில் பலரும் பகிர்ந்து வந்த நிலையில், அது மார்பிங் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இணையத்தில் உண்மையை விட போலிகள் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அதில், காங்கிரஸ் தலைவர் சோனியாவின் புகைப்படமும் சிக்கியுள்ளது.
சோனியாவின் புகைப்படம் ஒன்றில், அவரது பின்புறம் உள்ள அலமாறியில் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. இந்த புகைப்படம் திடீரென சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
ஏனெனில், அந்த அலமாறியில், இந்தியாவை எப்படி கிறிஸ்துவ நாடாக மாற்றுவது என்னும் புத்தகமும், பைபிள் மற்றும் ஏசு சிலையும் இருக்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
இந்தியாவின் நலம் விரும்பியாக கருதப்படும் சோனியா எப்படிப்பட்டவர் என்பது புரிகிறதா,' என்பது போன்ற கருத்துகளுடன் பலரும் இதனை சமூக வலைதளங்களில் கடுமையாக கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்நிலையில், இந்த புகைப்படம் மார்பிங் செய்யப்பட்டவை என தெரியவந்துள்ளது. உண்மையான புகைப்படத்தில் அந்த புத்தகமோ, பைபிளோ, ஏசு சிலையோ இடம்பெறவில்லை என்றும், விஷமிகள் சிலரால் இது சித்தரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.