மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாடு செல்கிறார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி
மருத்துவ பரிசோதனைக்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வெளிநாடு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சோனியாகாந்தி
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாடு செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருடன் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகிய இருவரும் உடன் செல்வார்கள் என கூறப்படுகிறது.

வெளிநாடு பயணம்
சோனியா காந்தி வெளிநாடு செல்லும் தேதி குறித்தோ அல்லது இடம் குறித்தோ எந்த தகவலும் வெளியாகவில்லை. இருப்பினும் செப்டம்பர் 4ஆம் தேதி காங்கிரஸ் கட்சி நடத்தவுள்ள பேரணியில் ராகுல் காந்தி நிச்சயம் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் கணேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், சோனியா காந்தி சிகிச்சைக்காக வெளிநாடு செல்கிறார் எனவும், அவர் இந்தியா திரும்பும் முன் உடல் நலம் சரியில்லாத அவரது தாயாரை சந்தித்துவிட்டு வருவார் எனவும் தெரிவித்துள்ளார்.
சரிகமப : இறுதி சுற்று போட்டியாளராக தேர்வான ஷிவானியின் நெகிழ்ச்சி செயல்! குவியும் பாராட்டுக்கள் Manithan
புத்தர் சிலை விவகாரம் - வாக்குறுதியை காற்றில் பறக்க விட்ட அநுர அரசு: சுமந்திரன் கடும் சீற்றம் IBC Tamil