‘’நான் தான் முழு நேரத் தலைவர்’’ : கட்சி கூட்டத்தில் சோனியா காந்தி பேச்சு
இன்று டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் சோனியா காந்தி தலைமையில் காரிய கமிட்டி கூட்டம் தொடங்கியது .
அப்போது கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி, நாட்டின் பொருளாதாரம் மிக மோசமடைந்துள்ளது.பல ஆண்டுகளாக சேமித்த சொத்துக்களை மத்திய அரசு விற்பதே இதுவே எடுத்துக்காட்டு என்று கூறினார்.
மேலும், உட்கட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவுகள் இன்று இறுதி செய்யப்படுகிறது. தேசிய அளவில் கூட்டறிக்கைகளை வெளியிட்டுள்ளோம்.
கட்சி எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து சுதந்திரமான நேர்மையான விவாதம் வேண்டும். கட்சியின் முழு அமைப்பும் மறுமலர்ச்சியை விரும்புகிறது. அதற்கு ஒற்றுமை முதன்மையாக இருக்க வேண்டும் என்று கூறினார்.
இதையடுத்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், கபில் சிபில் ஆகியோர் ஊடகங்கள் வாயிலாக கட்சியிடம் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்த சோனியா காந்தி, ஊடகங்கள் வாயிலாக பேசாதீர்கள்.எதுவாக இருந்தாலும் வெளிப்படையாக பேசுங்கள் என்று மூத்த தலைவர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும் கட்சியின் முழு நேர தலைவர் யார் என மூத்த உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு, நான் தான் காங்கிரஸ் கட்சியின் முழுநேர தலைவர் என்று கூறினார்.