காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் அம்மா காலமானார்

Indian National Congress Rahul Gandhi Sonia Gandhi
By Thahir Aug 31, 2022 01:22 PM GMT
Report

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் அம்மா உடல்நல குறைவால் இத்தாலியில் உள்ள அவரது வீட்டில் காலமானார்.

சோனியா காந்தியின் தாயாரான பவ்லா மானியோ இவர் இத்தாலியில் வசித்து வருகிறார். இவரை காண கடந்த ஆகஸ்ட் 23-ம் தேதி சோனியா காந்தி. ராகுல் காந்தி,பிரியங்கா காந்தி உள்ளிட்ட மூவரும் இத்தாலி சென்றனர்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் அம்மா காலமானார் | Sonia Gandhi S Mother Passed Away

இந்த நிலையில் ஆகஸ்ட் 27-ம் தேதி அவர் காலமானதாக காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அவரது இறுதிச் சடங்குகள் இத்தாலியில் நேற்று நடைபெற்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.