அரசியலில் இருந்து சோனியா காந்தி ஓய்வு - பரபரப்பு பேச்சு!
ஒற்றுமை யாத்திரையுடன் தனது அரசியல் பயணம் நிறைவடைவதாக சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
சோனியா காந்தி
சத்தீஷ்கர் மாநிலம் ராய்ப்பூரில் காங்கிரஸ் கட்சியின் 85வது மாநாடு தொடங்கியது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மாநாட்டு கொடியை ஏற்றி வைத்து முறைப்படி தொடங்கி வைத்தார்.

இதில், காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் உட்பட சுமார் 15 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர்.
அரசியல் பயணம்?
அதனைத் தொடர்ந்து பேசிய சோனியா காந்தி, இது நாட்டிற்கும், காங்கிரஸ் கட்சிக்கும் சோதனையான காலம் என்று கவலை தெரிவித்தார். நாட்டின் ஒவ்வொரு அமைப்பையும் பாஜக - ஆர்எஸ்எஸ் கைப்பற்றி வருவதாக சாடினார்.
மன்மோகன் சிங் தலைமையில் 2004 மற்றும் 2009 நாடாளுமன்றத் தேர்தல்களில் பெற்ற வெற்றி தனக்கு தனிப்பட்ட முறையில் திருப்தி அளித்ததாக சோனியா காந்தி தெரிவித்தார். காங்கிரஸ் கட்சிக்கு திருப்பு முனையாக அமைந்த தேச ஒற்றுமை யாத்திரையுடன் தனது அரசியல் பயணம் நிறைவடைவதாகவும் தெரிவித்தார்.