குடியரசு தலைவருடன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி திடீர் சந்திப்பு

Sonia Gandhi Draupadi Murmu
By Thahir Aug 23, 2022 01:09 PM GMT
Report

இந்தியாவின் 15-வது குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு கடந்த மாதம் 25-ம் தேதி பதவியேற்றார்.

குடியரசு தலைவருடன் சோனியா காந்தி சந்திப்பு 

குடியரசு தலைவராக பதவியேற்ற திரௌபதி முர்முவை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், அண்மையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  ஆந்திரா முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி உள்ளிட்டோர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Droupadi Murmu

இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை நேரில் சந்தித்து பேசினார்.

இருவரும் சந்தித்த புகைப்படத்தை வெளியிட்டுள்ள குடியரசு தலைவர் மாளிகை, இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என தெரிவித்துள்ளது.