சுவாச பாதையில் பூஞ்சை தொற்று பாதிப்பு - மருத்துவமனையில் சோனியா காந்திக்கு தீவிர சிகிச்சை

COVID-19 Sonia Gandhi
By Nandhini Jun 18, 2022 05:26 AM GMT
Report

இந்தியாவில் 2020-ம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. அப்போது தொடங்கிய கொரோனா பாதிப்பு தற்போது வரை தொடர்ந்து கொண்டு வருகின்றது. இருந்தாலும், மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவிட்டனர். கடந்த சில மாதங்களாக சீனா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்தது. அதனால், இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

தற்போது, இந்தியாவில் கொரோனாவால் புதிதாக 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருக்கிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

கொரோனா பாதிப்பு

சமீபத்தில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா தொற்று உறுதியானது. தொற்று உறுதியானதால் சோனியாகாந்தி வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.

பிரதமர் மோடி

இதனையடுத்து, இந்திய பிரதமர் மோடி தனது டுவிட்டர் பதிவில் : கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விரைந்து குணமடைய வேண்டும்" என்று கூறினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இதே போல் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில் : கொரோனா தொற்று உறுதி செய்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பூரண குணமடைய வாழ்த்துகிறேன். தொற்றுநோய் இன்னும் நீங்காததால் பொது வாழ்வில் உள்ள அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்குமறு கேட்டுக்கொள்கிறேன் என்று பதிவிட்டிருந்தார்.

சுவாச பாதையில் பூஞ்சை தொற்று பாதிப்பு - மருத்துவமனையில் சோனியா காந்திக்கு தீவிர சிகிச்சை | Sonia Gandhi Corona Hospital

மருத்துவமனையில் அனுமதி

வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டிருந்த சோனியா காந்தி தற்போது டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். தற்போது, சோனியா காந்தியின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகிறார் என்றும் காங்கிரஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சுவாச பாதையில் பூஞ்சை தொற்று பாதிப்பு

இந்நிலையில், காங்கிரஸ் கட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் -

கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சோனியா காந்திக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. சோனியா காந்தியின் சுவாச பாதையில் பூஞ்சை தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு பிந்தைய அறிகுறிகளுக்கான சிகிச்சையுடன் சேர்த்து பூஞ்சை பாதிப்புக்கும் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, சுவாச பாதையில் ஏற்பட்ட பூஞ்சை பாதிப்பிலிருந்து சோனியா காந்தி மீண்டு வருகிறார்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நேஷனல் ஹெரால்டு வழக்கு

இதற்கிடையில், ராகுல்காந்தி, பிரியங்கா காந்தியிடம் நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அலுவலகத்தில் 3 நாளாக 30 மணி நேரம் விசாரணை செய்து வருகின்றனர். சோனியா காந்தியும் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு ஜூன் 23-ம் தேதி ஆஜராக அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.