டெல்லியில் சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் தொடங்கியது
கடந்த மாதம் 20-ம் தேதி பஞ்சாப் மாநிலத்தில் 117 சட்டமன்ற தொகுதிகளுக்கும், 40 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட கோவாவில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்தது.
அதேபோல், உத்தரபிரதேசத்தில் 403 சட்டமன்ற தொகுதிகளில் 7 கட்டங்களாக தேர்தல் நடந்தது. இதனையடுத்து, உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப் ,கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டது.
இத்தேர்தலில் உத்திரபிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 4 மாநிலங்களில் பாஜக முன்னிலை வகித்து மாபெரும் வெற்றி பெற்றது. அதேபோல், பாஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை கைப்பற்றியது.
5 மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சி கடும் பின்னடைவை சந்தித்தது. காங்கிரஸ் கட்சி ஒரு மாநிலத்தில் கூட முன்னிலையில் இல்லை. இது காங்கிரஸ் தொண்டர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், டெல்லியில் சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் தொடங்கியுள்ளது.
5 மாநில தேர்தல் தோல்வி உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.