நடைபயணம்: ராகுல் காந்தியுடன் இணையும் சோனியா காந்தி!

Indian National Congress Rahul Gandhi Sonia Gandhi Kerala
By Sumathi Oct 03, 2022 02:11 PM GMT
Report

இந்திய ஒற்றுமை பயணத்தில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி பங்கேற்கவுள்ளார்.

நடைபயணம்

கன்னியாகுமரியில் தொடங்கி கேரளா வழியாக தற்போது கர்நாடகாவில் நடைபெற்றுவரும் இந்த நடைபயணம் இரண்டு நாள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வியாழக்கிழமையன்று காலையில் தொடங்கவுள்ளது.

நடைபயணம்: ராகுல் காந்தியுடன் இணையும் சோனியா காந்தி! | Sonia Gandhi Arrives In Join Bharat Jodo Yatra

இந்த யாத்திரையில் சோனியா காந்தியும் பங்கேற்கவுள்ளார். இதற்காக மைசூரு வந்துள்ள சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகிய இருவரும் சாமுண்டீஸ்வரி கோயிலில் வழிபட்ட பின்னர், குடகு மாவட்டத்தில் மடிகேரி அருகே உள்ள ரிசார்ட்டில் தங்கவுள்ளனர்.

சோனியா காந்தி

சமீபகாலமாக உடல்நிலை பாதிப்பு காரணமாக சோனியா காந்தி அரசியல் பரப்புரை நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்தார். நீண்ட நாட்களுக்குப் பிறகு, ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் பங்கேற்கும் கட்சியின் பொது நிகழ்ச்சியில் சோனியா காந்தி பங்கேற்கவுள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

நடைபயணம்: ராகுல் காந்தியுடன் இணையும் சோனியா காந்தி! | Sonia Gandhi Arrives In Join Bharat Jodo Yatra

இந்த ஐந்து மாத பயணம் தற்போது வெற்றிகரமாக 26வது நாளில் நுழைந்துள்ளது. கடந்த மாதம் கன்னியாகுமரியில் தொடங்கிய பாரத் ஜோடா யாத்ராவில், காஷ்மீர் வரை சுமார் 3,570 கிமீ நடைபயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.