சோனியா காந்தி திடீரென மருத்துவமனையில் அனுமதி - தொண்டர்கள் பதற்றம்

Sonia Gandhi
By Nandhini Jun 12, 2022 10:52 AM GMT
Report

இந்தியாவில் 2020-ம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. அப்போது தொடங்கிய கொரோனா பாதிப்பு தற்போது வரை தொடர்ந்து கொண்டு வருகின்றது. இருந்தாலும், மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவிட்டனர்.

கடந்த சில மாதங்களாக சீனா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்தது. அதனால், இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. தற்போது, இந்தியாவில் கொரோனாவால் புதிதாக 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருக்கிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

சோனியா காந்தி திடீரென மருத்துவமனையில் அனுமதி - தொண்டர்கள் பதற்றம் | Sonia Gandhi Admitted To Hospital Corona

கொரோனா பாதிப்பு

சமீபத்தில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா தொற்று உறுதியானது. தொற்று உறுதியானதால் சோனியாகாந்தி வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.

பிரதமர் மோடி

இதனையடுத்து, இந்திய பிரதமர் மோடி தனது டுவிட்டர் பதிவில் : கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விரைந்து குணமடைய வேண்டும்" என்று கூறினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இதே போல் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில் : கொரோனா தொற்று உறுதி செய்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பூரண குணமடைய வாழ்த்துகிறேன். தொற்றுநோய் இன்னும் நீங்காததால் பொது வாழ்வில் உள்ள அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்குமறு கேட்டுக்கொள்கிறேன் என்று பதிவிட்டிருந்தார்.

மருத்துவமனையில் அனுமதி

இந்நிலையில், வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டிருந்த சோனியா காந்தி தற்போது டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். தற்போது, சோனியா காந்தியின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகிறார் என்றும் காங்கிரஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.