திடீரென மருத்துவமனையில் அனுமதிக்க சோனியா காந்தி...டெல்லியில் பரபரப்பு

Indian National Congress Sonia Gandhi Delhi
By Karthick Sep 03, 2023 06:48 AM GMT
Report

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி திடீரென ஏற்பட்ட உடல்நல கோளாறால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவமனையில் சோனியா காந்தி  

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான சோனியா காந்தி தற்போது திடீரென உடல்நல கோளாறின் காரணமாக டெல்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திடீரென அவருக்கு ஏற்பட்ட காய்ச்சலின் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

sonia-gandhi-admitted-in-hospital

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர், தற்போது மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருக்கின்றார். சோனியா காந்தியின் உடல் நிலை சீராக உள்ளதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என்றும் கூறப்பட்டுள்ளது.

sonia-gandhi-admitted-in-hospital

வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த கடும் வியூகங்களை காங்கிரஸ் தலைமை மேற்கொண்டு வரும் நிலையில், முக்கிய தலைவரான சோனியா காந்தி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது காங்கிரஸ் தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.