தொடர்ந்து 20 நாட்கள் உண்ணாவிரதம்.., சோனம் வாங்சுக் மருத்துவமனையில் அனுமதி
டெல்லியில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் உடல்நிலை மோசமடைந்ததையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தொடர் உண்ணாவிரதம்
நீட் வினாத்தாள் கசிவு, யுஜிசி தேர்வு முறைகேடு, சிபிஎஸ்இ வினாத்தாள் திருத்த குளறுபடி உள்ளிட்ட விவகாரங்கள் இளைஞர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.
இதற்கு பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று கோரி கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதில் பங்கேற்ற சோனம் வாங்சுக், கடந்த 20 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.
தொடர் உண்ணாவிரதம் காரணமாக அவரது உடல் எடை 9 கிலோ குறைந்ததையடுத்து, போராட்டத்தை கைவிடுமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.
மருத்துவமனையில் அனுமதி
இந்த விவகாரம் தொடர்பான வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், சோனம் வாங்சுக்கின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணிக்க மத்திய அரசுக்கு அறிவுறுத்தியது.
இந்நிலையில், சோனம் வாங்சுக்கின் உடல்நிலை இன்று காலை மோசமடைந்தது.

இதனைத்தொடர்ந்து, டெல்லி காவல்துறையினர் அவரை போராட்ட இடத்திலிருந்து அகற்றி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அவரை போலீசார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, அங்கிருந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் போராட்ட இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.