24 இன்சுக்கு உடலில் வெட்டுக்காயம் ... கேன்சரால் அவதிப்பட்ட பிரபல நடிகை

By Petchi Avudaiappan May 25, 2022 08:40 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in சினிமா
Report

காதலர் தினம் படத்தில் நடித்த நடிகை சோனாலி பிந்த்ரே தான் புற்றுநோயில் இருந்த காலக்கட்டத்தை பற்றி பிரபல ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். 

தமிழ் சினிமாவில் எவர்க்ரீன் படங்களாக கொண்டாடப்படுபவைகளில் ஒன்று காதலர் தினம் திரைப்படம். குணால், சோனாலி பிந்த்ரே நடிக்க ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் உருவான இப்படம் இன்றளவும் மக்களால் கொண்டாடப்படுகிறது. படத்தின் பாடல்கள் ஒன்று பலரின் பேவரைட் லிஸ்டில் இடம் பெற்றுள்ளது. 

24 இன்சுக்கு உடலில் வெட்டுக்காயம் ... கேன்சரால் அவதிப்பட்ட பிரபல நடிகை | Sonali Bendre Reveals 23 Inch Scar After Cancer

இதனிடையே  கடந்த 2018 ஆம் ஆண்டு சோனாலி பிந்த்ரே புற்றுநோயுடன் போராடி மீண்டிருந்தார். புற்றுநோயிலிருந்து மீண்டு பலருக்கும் நம்பிக்கை தரும் வகையில் வாழும் அவர்   எப்படி நம்பிக்கையுடன் நோயிலிருந்து மீண்டேன் என்பது குறித்து தெரிவித்துள்ளார். 

அதன்படி சோனாலி  தனது வாழ்வை புற்றுநோய்க்கு முன் மற்றும் புற்றுநோய்க்குப் பின் எனக்கூறி அதை BC and AC என்று வகைப்படுத்தியுள்ளார்.  எனக்கு புற்றுநோய் உறுதியானதும் என்னுடைய மருத்துவர்கள் சொன்ன முதல் விஷயம் `எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் நீங்கள் மருத்துவமனைக்கு வந்துவிடுங்கள்’ என்பது தான். தொற்று அபாயம் எனக்கு அதிகம் இருந்ததால் விரைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன்.

அதன் பிறகு ஏராளமான சிகிச்சைகள் எனக்கு நடந்தது. அறுவை சிகிச்சைகளுக்குப் பிறகு, இன்னும் 24 மணி நேரத்துக்குள் நீங்கள் நடக்க வேண்டும் என்று அறுவை சிகிச்சை மருத்துவர் கூறினார். சொன்னதுபோலவே அறுவை சிகிச்சை செய்யப்பட்ட  24 மணிநேரத்தில் மருத்துவமனை வளாகத்தில் நடந்தேன். என் உடம்பில் 23 - 24 இன்ச்சுக்கு அறுவை சிகிச்சையால் ஏற்பட்ட வெட்டுக்காயம் இருந்தது. அசையவே சிரமமாக இருந்த அந்த தழும்போடு இவ்வளவு தூரம் பயணப்பட்டுள்ளேன்.