Friday, May 2, 2025

புரட்டிப்போட்ட மார்பக புற்றுநோய் - காதலர் தின நடிகையின் தற்போதைய நிலை..?

A R Rahman Tamil Actress Actress
By Karthick a year ago
Report

குணால் நடிப்பில் வெளியான காதலை தின படத்தின் மூலம் பெரும் புகழை அடைந்தவர் சோனாலி பிந்த்ரே.

சோனாலி பிந்த்ரே

ஒரு சிலருக்கு மட்டுமே முதல் படத்திலேயே அனைவரின் கவனத்தையும் திருப்பும் ஈர்ப்பு உண்டு. அவ்வாறான நடிகை தான் சோனாலி பிந்த்ரே. பாலிவுட்டில் பிரபலமாக இருந்த இவர் தமிழில் குணால் நடிப்பில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியான "காதலர் தினம்" படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகினார்.

sonali-bendre-on-her-cancer-struggle

முதல் படமே பெரும் வெற்றியை பதிவு செய்த நிலையில், அடுத்தடுத்த படங்களில் ஆனால் மீண்டும் தெலுங்கு, பாலிவுட் படங்களில் நடிக்க சென்று விட்டார். முன்னணி நாயகியாக இருந்து இவர், கடந்த 2018ல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார்.

புற்றுநோய்

ஸ்டேஜ் 4 கேன்சர் இருப்பது உறுதிசெய்யப்பட்டு அதற்கான தீவிர சிகிச்சை எடுத்துக்கொண்ட சோனாலி பிந்த்ரே, அதில் இருந்து அவர் மீண்டு வந்து உயிர்பிழைக்க 30% மட்டுமே வாய்ப்பு இருக்கிறது என மருத்துவர்கள் கூறிய நிலையில், கான்சரை வென்றார்.

sonali-bendre-on-her-cancer-struggle

48 வயதாகும் சோனாலி, தற்போது மீண்டும் பாலிவுட்டில் மும்முரமாக இயங்கி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு கடந்த 2002-ஆம் ஆண்டு கோல்டி பெஹல் என்பவருடன் திருமணமான நிலையில், இந்த தம்பதிக்கு ரன்வீர் பெஹல் என்ற மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

sonali-bendre-on-her-cancer-struggle

தனது புற்று நோய் கண்டறிதல், வாழ்க்கையில் முக்கியமானவற்றை முதன்மைப்படுத்தவும், தனது உடல்நலம் மற்றும் நல்வாழ்வில் கவனம் செலுத்தவும் உதவியது என்று பிந்த்ரே பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.