55 ஆண்டுகளுக்கு பின் தந்தையின் நினைவிடம் சென்ற மகன்...! - நெகிழ்ச்சி சம்பவம்...!
Tamil nadu
By Nandhini
55 ஆண்டுகளுக்கு பின் தந்தையின் நினைவிடம் சென்ற மகனால் நெகிழ்ச்சி சம்பவம் ஏற்பட்டுள்ளது.
தந்தையின் நினைவிடம் சென்ற மகன்
நெல்லை மாவட்டத்தை சேர்ந்த பிரபல சமூக சேவகர் திருமாறன். கடையம் அருகே வெங்கடாம் பட்டி பகுதியில் வசிக்கும் இவர் ஏராளமான ரத்த தான முகாம்களை நடத்தி இருக்கிறார்.
ஆதரவற்ற இல்லம் நடத்தி வரும் திருமாறனின் தந்தை 1967 ல் மலேசியாவில் உயிரிழந்தார். அப்போது திருமாறன் 6 மாத குழந்தையாக இருந்துள்ளார். தற்போது இவருக்கு 59 வயதாகிறது.
இதனையடுத்து, திருமாறன் கூகுள் மூலம் மலேசியாவில் உள்ள தன் தந்தையின் நினைவிடத்தை கண்டுபிடித்தார். இதன் பின்பு, மலேசியாவிற்கு சென்று தன் தந்தைக்கு அஞ்சலி செலுத்தி இருக்கிறார்.