ஆடைகளின்றி ஈ மொய்த்தபடி கிடந்த முதியவர்: மகனே சாலையில் வீசி சென்ற கொடூரம்
மதுரையில் உடல்நிலை சரியில்லாத தந்தையே மகனே சாலையில் வீசி சென்ற கொடூர சம்பவம் நடந்துள்ளது.
மதுரை மேலமாசி வீசியை சேர்ந்தவர் லக்ஷ்மணன், ஆட்டோ ஓட்டுநராக இருக்கிறார்.
இவரது தந்தை கருப்பத்தேவர்(வயது 80), மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்னர் உடல்நிலை மேலும் மோசமடைய, தந்தைக்கு கொரோனா இருக்கலாம் என பயந்து சாலையில் தந்தையை விட்டுவிட்டு சென்றுள்ளார்.
ஆடைகள் ஏதும் இல்லாமல் ஈக்கள் மொய்த்தபடி கருப்பத்தேவர் கிடக்க, அக்கம்பக்கத்தினர் தகவல் அளித்துள்ளனர்.
இத்தகவல் மாவட்ட ஆட்சியருக்கு தெரியவர, ரெட்கிராஸை தொடர்பு கொண்டு முதியவரை மீட்டு சிகிச்சையளிக்க உத்தரவிட்டார்.
இதன்படி முதியவரை மீட்ட அமைப்பினர் அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்தனர்.