பெற்றோர் பைக் வாங்கி தராததால் ஆத்திரம் - சாவிகளை விழுங்கிய மகன்
பைக் வாங்கி தராததால் மகன் 4 சாவிகளை விழுங்கியுள்ளார்.
பைக் கேட்டு அடம்
ஆந்திராவின் பாலநாடு மாவட்டத்திலுள்ள நரசராப்பேட்டையை சேர்ந்தவர் தேவரா பவானி பிரசாத். இளைஞரான இவர், பைக் ஓடுவதில் ஆர்வம் கொண்டவர்.
இந்நிலையில் அவரது பக்கத்துக்கு வீட்டுக்கு பயனுக்கு அவர்களது பெற்றோர் பைக் வாங்கி கொடுத்த நிலையில் தனக்கும் பைக் வாங்கி தருமாறு தனது பெற்றோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
லேப்ராஸ்கோப்பி சிகிச்சை
அதற்கு அவரது பெற்றோர் மறுத்த நிலையில், ஆத்திரமடைந்த அவர் வீட்டில் இருந்த 4 இரும்பு சாவிகளை வாயில் போட்டு விழுங்கியுள்ளார். இதனால் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து உடனடியாக அவரது பெற்றோர் உள்ளூர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக குண்டூர் அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
அங்கு பல்வேறு பரிசோதனைகளை மேற்கொண்ட மருத்துவர்கள், அதி நவீன லேப்ராஸ்கோப்பி தொழில்நுட்பம் மூலம் அறுவை சிகிச்சை இல்லாமலே சிறுவனின் வயிற்றில் இருந்த 4 சாவிகளையும் அகற்றி சிறுவனின் உயிரை காப்பாற்றினர்.
இது குறித்து பேசிய குண்டூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் கவிதா, மருத்துவமனையில் அதி நவீன லேப்ராஸ்கோப்பி தொழில்நுட்பம் இருந்ததால், அறுவை சிகிச்சை இல்லாமல் சாவியை அகற்ற முடிந்ததாகவும் தற்போது இளைஞரின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.