சாப்பிட அழைத்த தாயார்; கத்தியால் குத்தி கொலை செய்த மகன் - அதிர்ச்சி!

Kerala India Death Murder
By Jiyath Jun 24, 2024 05:10 AM GMT
Report

தாயாரை அவரது மகனே கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாயாருடன் தகராறு

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் வெளியேத்து பகுதியைச் சேர்ந்தவர் ஷைலஜா (52). இவரது மகன் ஆதில் (27) மனநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

சாப்பிட அழைத்த தாயார்; கத்தியால் குத்தி கொலை செய்த மகன் - அதிர்ச்சி! | Son Stabbed His Mother Shocking Incident Kerala

இதனிடையே அவர் தனது தாயாருடன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று தனது மகனை சாப்பிட வருமாறு ஷைலஜா அழைத்துள்ளார். அப்போது திடீரென ஆத்திரமடைந்த ஆதில், அருகிலிருந்த கத்தியை எடுத்து தாயாரை குத்தினார்.

'தில் இருந்தா வண்டிய விடுங்கடா' - சாலையில் சாக்குப்பை விரித்து தூங்கிய போதை நபர்!

'தில் இருந்தா வண்டிய விடுங்கடா' - சாலையில் சாக்குப்பை விரித்து தூங்கிய போதை நபர்!

மகன் கைது    

இதில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த ஷைலஜா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சாப்பிட அழைத்த தாயார்; கத்தியால் குத்தி கொலை செய்த மகன் - அதிர்ச்சி! | Son Stabbed His Mother Shocking Incident Kerala

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், மனநலம் பாதித்த மகன் தாயை கத்தியால் குத்தி கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து ஆதிலை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.