திருடிவிட்டு ஜாலியாக வந்த கொள்ளையன்; காலி பண்ண 'கூகுள் மேப்' - நாகர்கோவிலில் சுவாரஸ்யம்!
தனது தந்தையின் செல்போனை திருடி சென்ற நபரை ‛கூகுள்மேப்' உதவியுடன் மகன் பிடித்த சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது.
கொள்ளை
நாகர்கோவிலில் இருந்து 'ராஜ் பகத்' என்ற டெக் வல்லுநர் ஒருவரின் தந்தை ரயில் மூலம் திருச்சிக்கு சென்றுள்ளார். அப்போது அவரின் மொபைல்போன் மற்றும் பையை ஒருவர் திருடியுள்ளார். இது குறித்து தனது மகன் ராஜ் பகத்துக்கு வேறு ஒருவரின் போன் மூலம் அவர் தகவல் கொடுத்துள்ளார்.
தந்தையின் போனில் லொகேஷன் ஷேரிங் அம்சத்தை எனெபிள் செய்து வைத்திருந்த ராஜ் பகத், அதன் மூலம் போனை ட்ரேக் செய்துள்ளார். அதில், கொள்ளையன் மற்றொரு ரயிலில் நாகர்கோவில் வருவது தெரியவந்தது. மேலும், நெல்லையில் இறங்கிய கொள்ளையன், நாகர்கோவிலுக்கு மற்றொரு ரயிலில் புறப்பட்டு செல்வதும் தெரியவந்தது.
மீட்பு
இதனை அறிந்த ராஜ் பகத், தனது நண்பர் மற்றும் ரயில்வே போலீசாருடன் ரயில் நிலையத்தில் தயாராக இருந்துள்ளார். ஆனால் அங்கு கூட்டம் அதிகமாக இருந்ததால் கொள்ளையனை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து கூகுள் மேப் மூலம் ட்ரேக் செய்து, பேருந்து நிலையத்தில் கொள்ளையனை மடக்கிப் பிடித்து, தனது தந்தையின் பை மற்றும் மொபைல்போனை பகத் மீட்டுள்ளார். மேலும் அவரிடம் போலீசார் சோதனை மேற்கொண்டதில், ரூ.1,000 ரொக்கம், ப்ளூடுத் ஹெட்செட் மற்றும் மொபைல்போன் சார்ஜரும் இருந்துள்ளது.